Shiva Shakthi Agro - Pvt ltd

Shiva Shakthi Agro - Pvt ltd We specialize in high-quality tractor spare parts to keep your machinery running smoothly. Visit us for all your tractor needs!

From engines to hydraulic systems, With competitive prices and expert customer service, we ensure your satisfaction.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020/2021 ஆம் ஆண்டிற்கான விவசாய டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கல் வெளிவாரியாக கோரப்பட்டுள...
09/12/2021

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020/2021 ஆம் ஆண்டிற்கான விவசாய டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கல் வெளிவாரியாக கோரப்பட்டுள்ளன.



05.01.2022 திகதிக்கு முன்னர் உங்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பாடநெறிக்கான கட்டணம் 54000/- ரூபாய் மட்டும்.

ஒரு வருட காலத்தில் கல்வியினை பூர்த்தி செய்ய இயலும்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள படிவத்தினை நோக்கவும்.

உங்கள் நண்பர்களும் பயனடைய இப்பதிவை பகிருங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற மெருகூட்டப்பட்ட சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான பிரசார நடவடிக்கைகள்.வடமாகாண விவசாய திணை...
10/09/2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற மெருகூட்டப்பட்ட சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான பிரசார நடவடிக்கைகள்.
வடமாகாண விவசாய திணைக்களத்தினாலும் மற்றும் காலநிலைக்கு சீரமைவான விவசாயத் திட்டத்தின் அனுசரனையிலும் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் துண்டுப்பிரசும் மற்றும் ஒலிப்பதிவின் மூலமான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகள்.

 #நெல்_வயல்களை_பாதுகாப்போம்.  இலங்கையின் காலி , மாத்தறை , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , கம்பஹா , புத்தளம் , முல்லைத...
24/08/2021

#நெல்_வயல்களை_பாதுகாப்போம்.

இலங்கையின் காலி , மாத்தறை , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , கம்பஹா , புத்தளம் , முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களின் வயல்நிலங்களில் #இரும்புத்துரு வெகுவாகப் பரவிவுள்ளது.
தற்காலத்திலும் இந்த #இரும்புத்துரு குருனாகல் , பொலன்நறுவை போன்ற மாவட்டங்களிலும் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் இரும்பின் அளவு போகத்திற்குப் போகம் , வருடா வருடம் , இடத்திற்கிடம் வேறுபடலாம்.

சிறுபோகங்களில் விசேடமாக #இரும்புநஞ்சாதல் நிலைக்குப் பாதிப்படையக்கூடிய தன்மை நெல்லுக்கு அதிகமாக உள்ளது .

மண்ணில் இயற்கையாக காணப்படுகின்ற இரும்பின் அளவினை விட மேலதிகமாக மேட்டு நிலங்களிலிருந்து வடிந்தோடும் நீருடன் இரும்புத்துரு கொண்டுவரப்பட்டு படிவாக்கப்படுவதாலேயே இது ஏற்படுகின்றது.

இவ்வாறான இரும்புத்துரு நிலை மண்ணின் கட்டமைப்பினாலும் மழை வீழ்ச்சியளவாலும் வேறுபாடு அடைகிறது . மணல் மண்ணில் இரும்பு நஞ்சாதல் பொதுவாக ஏற்படும்.

அதேபோன்று மழைவீழ்ச்சி அதிகமான போகங்களின் போதும் இந்நிலை மிக அதிகமாகக் காணப்படலாம் .

#இரும்புநஞ்சாதலை_அடையாளம்_காணல்

பயிரின் எப்பருவமும் இரும்பு நஞ்சாதலுக்கு உட்படலாம்.
இருப்பினும் மட்டம் பெயரும் பருவமும் பூக்கும் பருவமும் அதிகமாகப் பாதிக்கப்படலாம் .

#நாற்றுப்பருவத்திலிருந்து_பதியவளர்ச்சி_அவத்தை_வரை
1. வளர்ச்சி குன்றுதல்.
2. மட்டம் பெயர்தல் குறைவடைதல்.
3. தாவரம் மெலிந்து குட்டையாதல்.
4. இலைகள் செங்கபில நிறமடைதல்.
(மிக மெல்லிய செங்கபில நிறம் புள்ளியாக மென்மையாகத் தோன்றி முழுத்தாவரத்திற்கும் பரவும்)

#பூக்கும்அவத்தையின்போது
1. கொடியிலை செங்கபில நிறமாக மாறும் . இது மெல்லியதாய் ஆரம்பிக்கும் .
2. சிறிய கதிர்கள் தோன்றவதுடன் கதிரிலிருக்கும் தானியங்களின் எண்ணிக்கையும் குறையும்.
3. முற்றாக நிரம்பாத தானியங்கள் உருவாகும் .
4. விதைகள் தனது நிறத்தை இழக்கும் .

#இரும்பு_நஞ்சாதல்_அதிகமாக_ஏற்படும்_வயல்
1. மேட்டுக் காணிகளை அண்டியதாயுள்ள மணற்பாங்கான ஒடுங்கிய நெற்காணிகள்.
2. பெரிய வயல் நிலங்களிடையேயுள்ள மணற்பாங்கான நெற்காணிகள்.

முக்கியமாக மேட்டுக் காணிகளை அண்டியதாயுள்ள ஒடுங்கிய மணற்பாங்கான நெற்காணிகள் . கவனிக்க வேண்டியவை : மண்ணிலுள்ள இரும்பின் அளவுக்கேற்ப இரும்பு நஞ்சாதல் ஏற்படாது . இது மண்ணின் இழையமைப்பு , மண் வளத்தன்மை என்பவற்றுக்கேற்ப வேறுபடும்.

மணற்பாங்கான வளமற்ற மண்ணில் இரும்பினளவு 30 ppm ஆக இருக்கும் போது வேளாண்மைக்கு நஞ்சாகும் என்பதுடன் சேதனப் பசளை அதிகமான வளமான மண்ணில் மேற்படி அளவு இருமடங்காக இருப்பினும் நஞ்சாதலைக் காட்டாது .

#இரும்பினால்_நஞ்சடைந்த_வயலிற்கு_பரிகாரம்.

வயல் நிலங்களைச் சூழ ஆழமான கான்களை மேட்டு நிலங்களிலிருந்து வடிந்தோடும் நீர் வயல் நிலங்களை அடையா வண்ணம் காணிகளைச் சூழ காணியின் மட்டத்தை விட ஆழமான கான்களை வெட்டுவதுடன் அந்நீரை வெளியேற்றுவதற்கு வசதியாக வடிகாள்களை ஏற்படுத்திவிடல் .

வயலிருந்து சேர்க்கப்படும் நீர் வெளியேற்றப் படுவதற்கு முடிந்த அளவு வயல்களினுள் ஏற்படுத்தப்படும் உப்புக்கான வழிகளை சீர் செய்தலும் அவற்றை உரிய முறையில் பேணுதலும் .

#மண்ணின்_வளத்தை_அதிகரித்தல்

பொசுபரசும் பொட்டாசியமும் குறைபாடு ஏற்படும் போது மண்ணிலிருந்து தாவரங்களால் உறுஞ்சப்படும் இரும்பின் அளவு அதிகரிக்கும் , ஆதலால் உரிய அளவுக்கே பொஸ்பரசும் பொட்டாசியமும் மண்ணுக்கு இடப்படல் வேண்டும் . வயலுக்குப் பசளை இடும் போது அடிக்கட்டுப் பசளையாக இடப்படும் பொசுபரசை வழங்குகின்ற மும்மைச் சுப்பர் பொஸ்பேற்றை சிபார்சு செய்த அளவிலேயே இடுதல் முக்கியமானது .

அவ்வாறே விவசாயத் திணைக்களம் மூலம் குறித்த பிரதேசங்களுக்கு சிபார்சு செய்த பசளைகளின் அளவுகளை விட , இரும்பு நஞ்சேற்படும் வயல்களுக்கு மியூரியேற்றுப்பொட்டாசு ஒரு ஏக்கருக்கு 15 கிலோகிராம் மேலதிகமாகக் கிடைக்குமாறு இட வேண்டும் .

வைக்கோலிடல் ( ஏக்கருக்கு 1-2 தொன் )

கரியாக்கப்பட்ட உமியிடல் ( ஏக்கருக்கு 250 கிலோகிராம் ) இது விசேடமாக தாவரத்திற்குத் தேவையான பொட்டாசியாத்தையும் வேறு நுண்மூலகப் பசளைகளையும் பெற்றுக் கொடுக்கும் இப்போசணைப் பொருட்கள் போதுமான அளவுகளிலிருப்பதால் நெற் தாவரம் குறைவாகவே இரும்பினை அகத்துறுஞ்சும்.

கிளிசிரீடியா போன்ற இழைகுழைகளை தனிப்படையாக வயல் நிலங்கள் மூடும் வகையில் இடுதல் மிகப் பயனுடையது.

உலர்ந்த மாட்டெரு ( ஏக்கருக்கு 12 தொல் ) இடுவதால் இது மண்ணின் சேதன் நிலைமையை முன்னேற்றமடையச் செய்து இரும்பு நஞ்சாதமைய குறைக்கின்றது .

மண்ணின் அமிலகார நிலைமைகளைக் குறைத்தல் அமிலத்தரையில் பொதுவாக ( மண் pH 4-5.5 க்கிடையே இருக்கும் போது ) நெற் தாவரங்களால் அதிக இரும்பு உறுஞ்சப்பட்டு நஞ்சடைதலைக் காட்டும்.

இந்த நிலையை தவிர்ப்பதற்கு மண்ணின் அமில காரநிலைமையை உசிதமான நிலைக்குக் ( 6-7 pH ) கொண்டு வருதல் வேண்டும் .

இதற்கு நான்கு போகங்களுக்கு ஒரு தடவை ஒரு ஏக்கருக்கு 800 கிலோகிராம் அளவு டொலமைட் தூள் ஒழுங்கிணைந்த வகையில் மண்ணிற்கு இடுதல் வேண்டும்

மண்ணை உலர்த்தல்
பயிர்ச் செய்கைப் போகத்தின் போது மண்ணை அடிக்கடி உலர விடுவதால் நஞ்சாக்கம் குறைவடையும் .

எதிர்ப்பினங்களைப் பயன்படுத்தல்

Bw 267-3 31/2 மாத வயதுடைய வெள்ளை நிற நீளமான அரிசியையுடைய இனமாகும் . ஏக்கருக்கு 80 - 100 புசல் வரையான மத்திய அளவு விளைவு தரக்கூடியது நடுத்தர உயரமுடைய இவ்வினம் பாட்டத்தில் விழக்கூடியது . ஈர வலயங்களுக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளது .

Bw 361 31/2 மாத வயதுடைய நடுத்தர நீளமான சிவப்பு அரிசியையுடைய அதிக விளைவு தரும் இனமாகும் . ஏக்கரிலிருந்து 120 - 220 புசல் வரை விளைச்சல் பெறக்கூடியது . அத்துடன் குறுகிய உயரமுடைய இவ்வினம் பாட்டத்தில் விழமாட்டாது . உலர் , இடை வலயங்களுக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

Bw 363 31/2 மாத வயதுடைய நடுத்தர நீளமான வெண்ணிற அரிசியையுடைய இது அதிக விளைவு தரும் இனமாகும் . ஏக்கரிலிருந்து 120 - 220 புசல் வரை விளைச்சல் பெறப்படலாம் . குறுகிய உயரமுடைய தாவரமாகையால் இது பாட்டத்தில் விழமாட்டாது . நாட்டின் சகல பாகங்களுக்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

Bw 364 3 1/2 மாத வயதுடைய நீளமான சிவப்பு நிற அரிசியை இது கொண்டிருப்பதுடன் ஈரவலயங்களிலுள்ள மணற்பாங்கான இரும்பு நஞ்சாக்கற் பிரச்சினையுடைய வயல்களுக்குச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது . நடுத்தர உயரமாக வளர்ந்தாலும் இவ்வினம் பாட்டத்தில் விழமாட்டாது . ஏக்கரிலிருந்து 100 - 120 புசல் வரையான விளைச்சலைத் தரக் கூடியது.

விவசாய_விளக்கம்

22/08/2021

#தன்நிகரற்ற_உயிரியல்_பீடைக்கட்டுப்பாடு

ட்ரைக்கோடெர்மா தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள் இதுபயிர்களின் உயிர்வாழும் விகிதத்தை மேம்படுத்தும். நாற்றுகளின் உறுதியான வளர்ச்சியை மேம்படுத்தும்.

#ட்ரைக்கோடெர்மா(Trochiderma) ஒரு #உயர்வினைத்திறன் கொண்ட #சேதன உயிரியல் முகவராகும்.

#ட்ரைக்கோடெர்மாவின்(Trochiderma) #சிறப்பம்சங்கள்..

*பாதுகாப்பு மற்றும் பயிர்சிகிச்சையின் மூலம் மண்ணின்மூலம் பரவும் பங்கசு நோய்களைத் தடுக்கவும்,கட்டுப்படுத்தவும் முடியும்.

*மண்ணை மேம்படுத்தும், மண்ணின் ஊடுருவல் மற்றும் வேர் அமைப்பின் ஒட்சிசன் விநியோகத்தை மேம்படுத்தும்.

*வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும், பயிர் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்கும் மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கும்.

ட்ரைக்கோடெர்மா(Trochiderma) செயல்ப்படும் முறை

#போட்டி_விளைவு
ட்ரைக்கோடெர்மா(Trochiderma) வேகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க வீதத்தை கொண்டுள்ளது, மேலும் மண்ணில் உள்ள போசனைகள், நீர், வாழிடம் மற்றும் ஒட்சிசனை விரைவாக உறிஞ்சி பயன்படுத்துகிறது, இதனால் தாவர நோயாக்கிகளின் வாழ்க்கைச் சூழல் தடுக்கப்படுகிறது.

#அன்டிபயோசிஸ்:
இது தாவர நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய பக்ரீரியா எதிர்ப்பு பொருட்களை சுரக்கிறது.(Gliotoxin, Viridian , Trichodermin, penicillin)

#சிம்பயோசிஸ்_மற்றும்_எதிர்ப்பு_தூண்டல்
தாவர வேர்களின் இணை வளர்ச்சி தாவரத்தின் உள் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்துகிறது மற்றும் தாவரத்தின் நோய் எதிர்ப்பை மேம்படுத்துகிறது;

#ஒட்டுண்ணி:
தாவர நோயாக்கிகளின் மைசீலியத்தில் உள்ள போசனையை உறிஞ்சி, தாவர நோய்க்கிருமிகளின் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்;

#தாவர_வளர்ச்சியில் ட்ரைக்கோடெர்மாவின் பங்களிப்பு

1) தாவர வளர்ச்சி மற்றும் விளைச்சல் அதிகரிக்கும்.

2) தாவரங்களின் முறையான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்.

3) வேர் வளர்ச்சி மற்றும் வறட்சிக்கு சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

4) ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் மற்றும் சேதன உரங்களின் பயனுள்ள பயன்பாட்டை அதிகரிக்கும்.

5) தாவரங்களின் செயல்திறனை மேம்படுத்தும்.

6) விதை முளைக்கும் விகிதம் மற்றும் வளரும் விகிதம் என்பவற்றை அதிகரிக்கும்.

7) மண்ணில் உள்ள பொஸ்பரசை கரையும் நிலைக்கு மாற்றி அகத்துறிஞ்சலை மேம்படுத்தும்.

#ட்ரைக்கோடெர்மா_பயன்படுத்துவதில்_கவனிக்கவேண்டிய_விடயங்கள்.

1. ட்ரைக்கோடெர்மா(Trochiderma) என்பது நுண்ணுயிர் பங்கசு, முக்கியமாக சப்ரோபிக், இது மண்ணில் ஒரு குறிப்பிட்ட ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இருக்கும்போது மட்டுமே வளரும்.

2. இது மண்ணில் பயன்படுத்தப்பட வேண்டும், மற்றும் தண்டுகள் மற்றும் இலைகளில் தெளிப்பதைத் தவிர்க்கவும்

(வேறு இரசாயனங்களுடன் கலந்து பாவிக்கவேண்டாம்)

ட்ரைக்கோடெர்மா(Trochiderma) #பயிர்களுக்கு_பாதிப்பில்லாதது, #தொடர்ச்சியான_பயன்பாடு_சிறந்தது.

#ஆக்கம்_விவசாய_விளக்கம்

 #வயலுக்கு_சேதனப்பசளையிட்டு_மண்ணை #வளப்படுத்துவோம்* காலநிலை  #சீர்குலைவுகளுக்கு  #நிலைபேறான தீர்வுடன்கூடிய பசுமையான சமூக...
17/08/2021

#வயலுக்கு_சேதனப்பசளையிட்டு_மண்ணை
#வளப்படுத்துவோம்

* காலநிலை #சீர்குலைவுகளுக்கு #நிலைபேறான தீர்வுடன்கூடிய பசுமையான சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன். விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தில் #சேதனப்பசளைக்கு அதிக #முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

* இதற்காக அரசாங்கத்தினால் #ஏக்கர்_ஒன்றிற்கு_5000_ரூபாவீதம் (5 ஏக்கரிற்கு மேற்படாமல்) ஊக்குவிப்பு நிதியாக வழங்கப்பட உள்ளது.

* இதற்காக #நீங்கள்_சேதனப்பசளை_தயாரித்து ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தது 500 கிலோ இடல்வேண்டும்.

* அத்துடன் #இறக்குமதி_செய்யப்பட்ட #நைதரசன்_திரவப்பசளை உங்கள் வயல் நிலங்களில் #மண்பரிசோதனை செய்யப்பட்டபின்னர் சிபாரிசு செய்யப்படும்.

* அத்துடன் ை மற்றும் மண்போசனையை அதிகரிக்க உதவும் #நுண்ணியிர்_கலவை என்பன வழங்கப்படும்.

* இச்செய்தி தொடர்பான விழிப்பணர்வூட்டல் நடவடிக்கைகள் உங்கள் பிரிவு விவசாய திணைக்களத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

#ஏனையவர்களும்_இத்தகவலை_அறிந்துகொள்வதற்கு
ெய்யுங்கள்

#விவசாய_விளக்கம்

14/08/2021

பயன்தரும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை மண்ணில் அதிகரிக்கவும் தாவரங்களுக்கு தேவையான பிரதானமான நைதரசன் மூலகம் மற்றும் ஏனைய மூலகங்களை வழங்கும் கரைசல் இதுவாகும். மிக இலகுவாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய முறையை அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் இது தொடர்பாக அறிந்துகொள்ள...
https://youtu.be/T-nvhoOOEYw

எமது சிறுமுயற்சிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற  #தினைஅறுவடை,  #சேதனதிரவப்பசளை,  #மீன்அமிலம் தாயாரித்தல் தொடர்பான களநிலைப்பயிற்...
12/08/2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற #தினைஅறுவடை, #சேதனதிரவப்பசளை, #மீன்அமிலம் தாயாரித்தல் தொடர்பான களநிலைப்பயிற்சிகள்.

#தினை_பயிர்ச்செய்கை_விளக்கம்.

*தினை ஒரு தானிய வகையை சேர்ந்தது.

*இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர்.

*தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று.

*இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

*இப்பயிருக்கு மிக குறைந்த அளவு நீர் போதுமானது.

*வரிசைகளில் விதைப்பதாயின் ஏக்கருக்கு 04Kg

*வீசி விதைப்பதாயின் ஏக்கருக்கு 05Kg.

*நாற்றுமேடையில் இட்டு 14-21 நாட்களில் வயல் நடுகை செய்யப்படல்வேண்டும்.

*நடுகை இடைவெளி 25cm x 10cm.

*வயல்நடுகை செய்து 45 நாட்களில் அறுவடை மேற்கொள்ளலாம்.

*விளைச்சல் 1850kg/Ha.

*நோய் பீடைத்தாக்கங்கள் குறிப்பிடக்கூடிய அளவில் இல்லை.

#தினையில்இருந்து_தயாரிக்கக்கூடிய_உணவுகள்.
#அவல்_உப்புமா_தோசை_பிட்டு_முறுக்கு_பகோடா.

#தினையின்_ஆரோக்கியரீதியான_நன்மைகள்.

>உடல் எடையை குறைக்கும்.
> நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்.
> மன அழுத்தம் போக்கும்.
> எலும்புகள் வலுவடையும்.
> பார்வை தெளிவடையும்.
>புரதச்சத்து நிறைந்தது.
>நார்ச்சத்து நிறைந்தது.

நன்றி- ிகரன்

  திட்டத்தின் அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிற்கான நேற்றைய பயிற்சிகளின் சிலபதிவுகள் ாமரம்_வன்கத்தரித்தல் #திர...
11/08/2021

திட்டத்தின் அனுசரனையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிற்கான நேற்றைய பயிற்சிகளின் சிலபதிவுகள்
ாமரம்_வன்கத்தரித்தல்
#திரவப்_பசளைதயாரிப்பு


#மாமரங்களை_கத்தரித்தலின்_நன்மைகள்

*கத்தரித்தல் மா மரங்களில் துளிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

*இதன் விளைவாக பொதுவாக தாவரங்கள் மீண்டும் வளரும்.

*மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டால், அவை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பலன் தராது.

*கத்தரித்தல் பொதுவாக மரங்களை வடிவமைப்பதற்கும் மையங்களைத் திறப்பதற்கும் மேற்கொள்ளப்படுகிறது.

*மரத்தில் காற்று மற்றும் சூரிய ஒளியை ஊடுருவி நகர்த்த அனுமதிக்கிறது.

*மரங்கள் வழியாக Sprays ஊடுருவுவதை எளிதாக்குகிறது.

*பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதை இலகுவாக்குகிறது.

*சூரிய ஒளி மரத்தில் ஊடுருவும் திறன் பழத்தின் நிறத்தை அதிகரிக்கிறது மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.

#விவசாயவிளக்கம்

08/08/2021

#கூட்டெருவின்_தரத்தை_அதிகரித்தல்
கூட்டெரு உற்பத்தி செய்யும்போது கூட்டெருவின் தரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் இவையாகும். இந்த தகவல்களை நீங்கள் பகிர்ந்துகொள்வதன்மூலம் ஏராளமான நண்பர்கள் பயனடையும் வாய்ப்பு உள்ளது.


#நைதரசன்_அளவை_அதிகரித்தல்
-விலங்குக் கழிவுகளுடன் , அவரைக் குடும்பப் பயிர்களை அதிகளவில் பயன்படுத்தல்.

#பொட்டாசியத்தின்_அளவை_அதிகரித்தல்
-உற்பத்தி செய்யப்படும் கூட்டெருவின் முழு நிறையின் 5 % உமிக்கரியை கலத்தல்.
-மூலப் பொருளாக காட்டுச் சூரியகாந்தியை அதிகளவில் பயன்படுத்தல்.
-சிறிய துண்டுகளாக வெட்டிய வாழைத் தண்டை அல்லது ஓலையைப் பயன்படுத்தல்.

#பொசுபரசின்_அளவை_அதிகரித்தல்
-கூட்டெரு குவியலை பரவி விடும் போது எப்பாவல பாறைப் பொசுபேற்றை படைகளின் மீது விசிறல்.
(1,000 Kg மூலப் பொருட்களுக்கு 50 Kg பாறைப் பொசுபேற்று)

தயாரிக்கப்படும் #கூட்டெருவின்தரத்தை அதிகரிப்பதற்கு இடைக்கிடையே சாணம் , மாட்டுச் சிறுநீர் , கிளிசிரிடியா இலைகள் போன்றவற்றை சேர்ப்பது பொருத்தமானதாகும்.

#கூட்டெருவிற்கான_தர_நியமங்கள்

ஈரப்பதன் < 25 %
மணல் சதவீதம் ( உலர் நிறை ) < 20 % )
பீ.எச் . பெறுமானம் 6.5 - 8.5
காபன் - நைதரசன் விகிதம் 10 - 25

#போசணைப்_பொருட்களின்_குறைந்தபட்ச_அளவு( உலர் நிறை )
காபன் C 20 %
நைதரசன் N 1 % )
பொசுபரசு P , 0 , 0.5 %
பொற்றாசியம் K , 0 1 1 %
மக்னீசியம் Mgo 0.5 %
கல்சியம் Ca ) 0.7 %

#உயர்ந்தபட்ச_பார_உலோகங்களின்_அளவு (உலர்நிறை)( mg / kg )

கட்மியம் ( Cd ) 3
குரோமியம் ( Cr ) 50
ஈயம் ( Pb ) 50
இரசம் ( Hg ) 50 )
நிக்கல் ( Ni ) 0.51
நாகம் ( Zn ) 50
ஆசனிக் ( As ) 3

#ஆதாரம் : இலங்கை தரநிர்ணய நிறுவனம் 2019 (13)

  திட்டத்தின் அனுசரனையில் முல்லைத்தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற மீன்அமிலம்தயாரிப்பு, கூட்டுப்பசளை உற்பத்தி தொடர்பான பயிற...
04/08/2021

திட்டத்தின் அனுசரனையில் முல்லைத்தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற மீன்அமிலம்தயாரிப்பு, கூட்டுப்பசளை உற்பத்தி தொடர்பான பயிற்சி.

#மீன்_அமிலம்_தயாரிப்புமுறை

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு மண்மாத்திரத்தில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.

இந்த திரவத்திலிருந்து துர்வாடை வீசாது.
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மீன் உரம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், அது தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பிரதான போசனைமூலகங்களை வழங்குவதன் மூலம் மண்ணின் வளத்தையும் அதிகரிக்கிறது.

மீன் உரங்கள் பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்துடன் நைட்ரஜனின் ஆதாரத்தையும் வழங்குகின்றன.

செயற்கை உரங்களைப்போல் அல்லாமல் அவை அலாஸ்கா உலர் உரங்களில் காணப்படும் கல்சியம் போன்ற இரண்டாம் நிலை போசனைகளையும் வழங்குகின்றன.

வெவ்வேறு முறைகள், தகவல்களை அறிந்துகொள்வதற்கு பின்னூட்டங்களையும் பாருங்கள்

#தகவல்களை_அனைவரும்_அறிவதற்காகSHARE_செய்யுங்கள்_நண்பர்களே.

விவசாய விளக்கம்

31/07/2021

https://youtu.be/aOyHADHX5SU
தற்போது நிலவும் விவசாய கொள்கைகளை கருத்திற்கொண்டு கருக்கிய உமி எவ்வாறு செய்வது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு சிறிய முயற்சி மேற்கொண்டுள்ளோம் அத்துடன் உங்கள் ஆதரவே எங்கள் உத்வேகம். எனவே விவசாய தகவல்களை அறிந்துகொள்வதற்கு தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

விவசாய விளக்கம்

Address

Main Street, Mulliyawalai
Mullaitivu
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shiva Shakthi Agro - Pvt ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share