King fisher Dk

King fisher Dk king fisher one plate form to grow

02/06/2021

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
*சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
*பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

27/05/2021
இதுவே மைத்ரீயா இருந்துருந்தா பேஸ்புக் வாட்சாப்ப கட் பண்ணிருப்பாருகொரோணா அப்டிகா போயிருந்துருக்கும்ஐடியா இல்லாத ஆட்சி..  ...
12/05/2021

இதுவே மைத்ரீயா இருந்துருந்தா பேஸ்புக் வாட்சாப்ப கட் பண்ணிருப்பாரு
கொரோணா அப்டிகா போயிருந்துருக்கும்

ஐடியா இல்லாத ஆட்சி.. darsan

 🚨இன்றிரவு முதல் பஸ்  இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல  செல்ல முடியும், பஸ்ஸில் நின்று பயணிக்க அ...
11/05/2021



🚨இன்றிரவு முதல் பஸ் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல செல்ல முடியும், பஸ்ஸில் நின்று பயணிக்க அனுமதி இல்லை.

🚨 முச்சக்கர வண்டி ஓட்டுநரைத் தவிர இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.

🚨அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றது

🚨இன்று நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் வீதி தடை அமைக்கப்படும்.

🚨விடுமுறை மற்றும் ஓய்வுக்கால பயணங்கள் அனுமதிக்கப்படாது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அலுவலக ஐடி பயன்படுத்தலாம்.

🚨வேறு மாகாணங்களில் இருந்து வருவோரை திரும்பி அனுப்புமாறு ஹோட்டல்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

09/05/2021
 #ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழு...
07/05/2021

#ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..அமெரிக்காவில் இருந்து,நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்..நான் இளமை...
17/04/2021

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..
அமெரிக்காவில் இருந்து,
நான் பிறந்த
லண்டன் மாநகருக்கு சென்றேன்..

நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த
இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது..
என்னை காண இலட்சக் கணக்கில்
மக்கள் திரண்டனர்..
ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த
என் காதலியை தேடினேன்..
அவள் இல்லை..
அன்று வறுமை எங்களை பிரித்தது..
இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள்
காண்கின்றன..

நான் தேடுவதெல்லாம் வீதிகளில்
ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐன்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...

பணம் நமக்கு எல்லாவற்றையும்
கொடுக்கலாம், ஆனால்
வறுமை நம்மிடம் இருந்து பறித்த
சிலவற்றை
பணத்தால் திருப்பி தர
முடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!

#சார்லி சாப்லின்

"வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்,சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்"சமீக காலமாக என்னை...
02/03/2021

"வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்,
சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்"

சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் .... கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ..... முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக .... வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டே விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலுப் படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே...
இந்த நாள் இனிய நாளாகட்டும்.

Address

Mullaitivu

Opening Hours

Monday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94774653468

Alerts

Be the first to know and let us send you an email when King fisher Dk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share